சுடச்சுட

    

    முதுகுளத்தூர் ஸ்ரீவடக்கு வாசல் செல்வி அம்மன் கோயிலில் சக்தி கரக ஊர்வலம்

    By முதுகுளத்தூர்,  |   Published on : 17th July 2016 12:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முதுகுளத்தூர் வடக்கு வாசல் ஸ்ரீ செல்வி அம்மன் கோயிலில் சக்தி கரக ஊர்வலம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

    இக்கோயில் 40 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு, பல்வேறு பூஜைகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற்ற சக்தி கரக ஊர்வலத்தையொட்டி, கோயில் பூசாரி வெங்கடேசன் சக்தி கரகம் எடுத்து, அய்யனார் கோயில், வழிவிடு முருகன் கோயில், பேருந்து நிலையம், காந்தி சிலை, ஸ்ரீசுப்பிரமணியர் கோயில் வழியாக ஊர்வலமாகச் சென்று மீண்டும் கோயிலை அடைந்தார்.

    பூசாரியுடன் ஊர்வலமாக பக்தர்களும், பொதுமக்களும் ஏராளமானோர் சென்றனர். பின்னர், முதுகுளத்தூர் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியரின் ஆடல் பாடல் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கு, கோயில் நிர்வாக கௌரவத் தலைவர் எஸ். பாலகுருசாமி தலைமை வகித்தார்.

    கோயில் நிர்வாகத் தலைவர் எஸ். வடமலையான், செயலர் தூரி. அழகர்சாமி, பொருளாளர் கே.பெருமாள், துணைத் தலைவர் எஸ். ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் காளிமுத்து, வடிவேல், ஆசிரியை உமா ஆகியோர் செய்திருந்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai