சுடச்சுட

  

  ரயில் நிலையத்திலுள்ள குறைகளை தொலைபேசி எண்-138 மூலம் தெரிவிக்கலாம்:மதுரை கோட்ட கூடுதல் மேலாளர் தகவல்

  By ராமேசுவரம்  |   Published on : 17th July 2016 12:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ரயில் நிலையத்தில் உள்ள குறைகள் குறித்து இலவச தொலைபேசி எண்-138-க்கு அழைப்பு விடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என, பசுமை ரயில் நிலையம் திட்டத்தின் கீழ் ராமேசுவரம் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளை சனிக்கிழமை ஆய்வு நடத்த வந்திருந்த தென்னக ரயில்வே மதுரைக் கோட்ட கூடுதல் மேலாளர் முரளி கிருஷ்ணா தெரிவித்தார்.

  பசுமை ரயில் நிலைய திட்டத்தின் கீழ், ராமேசுவரம் ரயில் நிலைய வளாகத்தில் ரூ.2 கோடி மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் 2 பயணிகள் ஓய்வு அறைகள், பயணிகளுக்கான குளிர்சாதன ஓய்வறை, கழிப்பறைகள், நடைமேடை எண் 1 இல் நடைபெற்று வரும் பணிகள் உள்ளிட்டவற்றை கூடுதல் மேலாளர் முரளி கிருஷ்ணா பார்வையிட்டார்.

  தொடர்ந்து, ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு கட்டணச் சீட்டு வழங்கும் இடம், ரயில் நிலைய அலுவலகம், ரயில் வருகை நேரத்தின் விவரம் குறித்து தெரிந்து கொள்ளும் விளக்க தொடு திரை இயந்திரம் மற்றும் சிற்றுண்டிச்சாலை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் மற்றும் ரயில் நிலைய சுகாதாரம் குறித்து பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

  பின்னர், ரயில்வே அதிகாரிகளுடன் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

  இதையடுத்து, அவர் செய்தியாளர்களிடையே தெரிவித்தது: மத்திய அரசு அறிவித்துள்ள பசுமை ரயில் நிலையத்தில் ராமேசுவரம் ரயில் நிலையமும் ஒன்றாகும். இத்திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருவதால், பணிகளை முடிப்பதிலும் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

  ரயில் நிலையத்தில் முதல் நடைமேடை அமைக்கும் பணிகள் 6 மாதத்துக்குள் முடிக்கப்படும்.

  ரயில் நிலையங்களில் சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட பயணிகளின் அடிப்படை பிரச்னைகள் குறித்தும், அதுபோல ரயிலில் பயணம் செய்யும்போது தேவைப்படும் உதவிகள் குறித்தும் இலவச அழைப்பு தொலைபேசி எண் 138-க்கு பதிவு செய்தால், அழைப்பு பதிவு செய்த சில நிமிடங்களிலேயே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் குறைகளை சரி

  செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என, அவர் தெரிவித்தார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai