சுடச்சுட

  

  ராமநாதபுரத்தில் காவலர்களுக்கு முதலுதவிப் பயிற்சி

  By ராமநாதபுரம்,  |   Published on : 17th July 2016 12:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகக் கூட்ட அரங்கில், ரெட் கிராஸ் அமைப்பின் சார்பில் காவலர்களுக்கு முதலுதவிப் பயிற்சி சனிக்கிழமை அளிக்கப்பட்டது.

  இப்பயிற்சிக்கு, ரெட் கிராஸ் அமைப்பின் மாவட்டச் செயலர் எம். ராக்லாண்ட் மதுரம் தலைமை வகித்தார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தி. இன்பமதி, ரெட் கிராஸ் அமைப்பின் துணைத் தலைவர் எஸ். ஹாரூன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சியை, ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தொடக்கி வைத்துப் பேசினார். ரெட்கிராஸ் அமைப்பின் மாநில முதலுதவிப் பயிற்றுநர்கள் எஸ். சொக்கநாதன், எஸ். அலெக்ஸ் ஆகியோர் 100 காவலர்களுக்குப் பயிற்சியளித்தனர்.

  விபத்தில் காயம் அடைந்தவர்களின் உயிர்களை பாதுகாக்கும் முறைகள், மனித உடல் செயல்படும் விதம், முதலுதவியின் போது செய்யக்கூடாதவை என பல்வேறு தலைப்புகளில் செயல்முறை விளக்கத்துடன் பயிற்சியளிக்கப்பட்டது. நிறைவாக, ரெட்கிராஸ் அமைப்பின் பொருளாளர் சி. குணசேகரன் நன்றி கூறினார். பயிற்சி 2 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறுகிறது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai