சுடச்சுட

  

  ராமநாதபுரம்மக்கள் நீதிமன்றத்தில் 185 வழக்குகளுக்கு தீர்வு

  By ராமநாதபுரம்  |   Published on : 17th July 2016 12:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்ற வளாகத்தில், சனிக்கிழமை ஒரே நாளில் 723 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அவற்றில் 185 வழக்குகளுககு தீர்வு காணப்பட்டன.

  ராமநாதபுரம் இலவச சட்ட உதவி மையத்தின் மூலம், மாவட்ட முதன்மை நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் கூடியது. முதலாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி இன்பகார்த்திக் தலைமை வகித்தார். பணி ஓய்வுபெற்ற சார்பு நீதிமன்ற நீதிபதி எஸ். அண்ணாமலை உறுப்பினராகவும் இருந்து வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது.

  ஒரே நாளில் 723 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றில், 185 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது. இதன்மூலம், ரூ.73,75,600 வசூலிக்கப்பட்டது. ஏற்பாடுகளை, இலவச சட்ட உதவி மைய நிர்வாகிகள் செய்திருந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai