சுடச்சுட

    

    அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை

    By ராமேசுவரம்  |   Published on : 18th July 2016 07:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமேசுவரம் ஜமாஅத் சார்பில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஜமாஅத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு  பாராட்டுச் சான்றிதழும், கல்வி ஊக்கத்தொகையும் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

      ராமேசுவரம் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, ஜமாஅத் தலைவர் அப்துல் ஹமீது தலைமை வகித்தார். ஜமாஅத் ஜெயலர் அப்துல்கலாம் வரவேற்றார்.

      நிகழ்ச்சியில், மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அண்ணன் முகமது முத்துமீரான்லெப்பை மரைக்காயர் முன்னிலை வகித்து, 10 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற முகம்மது ஷாபிக், ஹதீஜா ஆகியோருக்கும், பிளஸ்  2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற நூருல்ஹூதாயா, முகம்மது பயாஸ், ஒலிமுகம்மது காசிம் ஆகிய மாணவர்களுக்கும் தலா ரூ. 3 ஆயிரம் கல்வி ஊக்கத் தொகையும், பாராட்டுச் சான்றிதழையும் வழங்கிப் பாராட்டினார்.

      இந்நிகழ்ச்சியில், ஜமாஅத் பொருளாளர் ஆவுல்மீரான் உள்பட நிர்வாகிகளும், மாணவர்களின் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai