சுடச்சுட

  

  எம்.புதுக்குளம் கண்மாயில் மீன்பிடித் திருவிழா

  By முதுகுளத்தூர்  |   Published on : 18th July 2016 07:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே எம்.புதுக்குளம் ஊராட்சியிலுள்ள கண்மாயில் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.

     கமுதி வட்டம், எம்.புதுக்குளம் கண்மாயில் மீன்பிடித் திருவிழா, ஊராட்சித் தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்றது. எம்.புதுக்குளம் ஊராட்சி நிதியில், ஓராண்டுக்கு முன் ரூ. 4 ஆயிரத்துக்கு மீன் குஞ்சுகள் வாங்கப்பட்டு, எம்.புதுக்குளம் கண்மாயில் வளர்க்கப்பட்டது.

    தற்போது, இந்த கண்மாயில் மீன்கள் பெரிதாக வளர்ந்து, ஒவ்வொன்றும் குறைந்தது 7 கிலோ எடை அளவுக்கு உள்ளன. மீன்பிடித் திருவிழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை  ஊராட்சி சார்பில் மீன்கள் பிடிக்கப்பட்டன.

    இதில், மொத்தம்  5 ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான மீன்கள் பிடிக்கப்பட்டதால், கிராமத்தில் உள்ளவர்களுக்கு ஒரு கிலோ மீனின் விலை ரூ. 50-க்கு விற்கப்பட்டு  ஊராட்சி நிதியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இதனால் ஊராட்சி நிர்வாகத்துக்கு ரூ. 3 லட்சத்துக்கு மேல் வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கிராமத்தினர் தெரிவித்தனர். இந்த மீன்பிடித் திருவிழாவை சுற்று பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கண்டு களித்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai