சுடச்சுட

  

  தெளிசாத்தநல்லூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரிக்கை

  By பரமக்குடி  |   Published on : 18th July 2016 07:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பரமக்குடி நகராட்சிக்கு அருகில் உள்ள தெளிசாத்தநல்லூர் ஊராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     தெளிச்சாத்தநல்லூர் ஊராட்சியில் சோமநாதபுரம், கனிநகர், மூவேந்தர் நகர், வ.உ.சி. நகர், திருநகர், சிட்கோ பகுதிகள் அடங்கியுள்ளன. நகராட்சி பகுதியையொட்டி அமைந்துள்ளதால், இந்தப் பகுதிகளில் அதிக அளவில் வீடுகள் கட்டப்பட்டு மக்கள் குடியிருந்து வருகின்றனர்.   இந்நிலையில், இப்பகுதிகளில் சாக்கடைக் கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படாததால், கழிவுநீர் தேங்கியுள்ளது. குப்பைகள் அகற்றப்படாததால், துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. இப்பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற, மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai