சுடச்சுட

    

    நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு: ஜி.பி.எஸ்., மீன்பிடி சாதனங்கள் பறிமுதல்

    By ராமேசுவரம்  |   Published on : 18th July 2016 07:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கச்சத்தீவு அருகே சனிக்கிழமை மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 5 பேரை இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்து, ஜி.பி.எஸ். உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தி விரட்டியடித்துள்ளனர்.

       ராமேசுவரம் பகுதியிலிருந்து சனிக்கிழமை காலை 626 படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.  கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை, அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கைக் கடற்படையினர் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தி விரட்டியடித்தனர்.   பின்னர், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த சேசுராஜா என்பவருக்குச் சொந்தமான படகை சிறைபிடித்து, படகிலிருந்த மீனவர்கள் 5 பேரையும் பிளாஸ்டிக் பைப்பால் தாக்கியதுடன், படகு ஆவணங்கள், மீனவர்கள் அடையாள அட்டையை பார்வையிட்டு விசாரணை செய்துள்ளனர்.

      படகிலிருந்த 2 ஜி.பி.எஸ். கருவிகள், 5 செல்லிடப்பேசிகள், டீசல் கேன்கள் மற்றும் பிடித்து வைத்திருந்த இறால் உள்ளிட்ட மீன்களையும் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து, கடலில் விரித்திருந்த மீன்பிடி வலைகளை வெட்டி சேகரித்துக் கொண்டனர்.

      அதையடுத்து, இனிமேல் இப்பகுதியில் மீன்பிடிக்க வரக்கூடாது என எச்சரித்துவிட்டு, சிறைப்பிடித்து வைத்திருந்தவர்களை இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு விடுவித்துள்ளனர்.

      இந்நிலையில், மீன்பிடி சாதனங்கள் பறிபோனதால், தொடர்ந்து மீன்பிடிக்க முடியாமல் படகை செலுத்திக்கொண்டு, சனிக்கிழமை நள்ளிரவே மீனவர்கள் கரையை அடைந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai