Enable Javscript for better performance
பரமக்குடி ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழா- Dinamani

சுடச்சுட

    

    பரமக்குடி ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழா

    By பரமக்குடி  |   Published on : 18th July 2016 07:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமக்குடி ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவை முன்னிட்டு, 6ஆம் திருநாளான சனிக்கிழமை பெருமாள் யானை வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்தார்.

       பரமக்குடி செளராஷ்ட்ர பிராஹ்மண மஹாஜனங்களுக்குச் சொந்தமான ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் கொடியேற்றப்பட்டு, விழா தொடங்கியது.    விழாக் காலங்களில் உபயதாரர்களால் பகல், இரவு வேளைகளில் பெருமாள் ஹம்ஸ வாகனம், சிம்ம வாகனம், கருட வாகனம், ஹனுமார் வாகனங்களில் எழுந்தருளினார். ஆறாம் திருநாளான சனிக்கிழமை யானை வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  பெருமாள் வீதிஉலாவின்போது, பக்தர்கள் வழிநெடுகிலும் தேங்காய், பழம் வைத்து பூஜைகள் செய்து வழிபட்டனர். 7 ம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை இரவு புஷ்பப் பல்லக்கில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

       தொடர்ந்து, 9 ஆம் திருநாளான செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு மேல் தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாட்டினை, ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தானம் மானேஜிங் டிரஸ்டி என்.எஸ். அகஸ்தியன், டிரஸ்டிகள் டி.ஜி. மாதவன், எஸ்.என். நாகநாதன், கே.என். கெங்காதரன், எம்.கே. கண்ணன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai