சுடச்சுட

  

  ராமகிருஷ்ண மடம் சார்பில் மாணவர்களுக்கு இலவச சீருடைகள்

  By ராமநாதபுரம்  |   Published on : 18th July 2016 07:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராமநாதபுரம் ராமகிருஷ்ண மடத்தின் சார்பில், நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள 170 ஏழை மாணவ, மாணவியர்க்கு ஞாயிற்றுக்கிழமை இலவசமாக பள்ளிச் சீருடைகள் வழங்கப்பட்டன.   

     ராமநாதபுரம் தாயுமானசுவாமி மடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, ஞானதீப சேவா சங்கத்தின் தொண்டர் எம்.என். துரை தலைமை வகித்தார். சங்க நிறுவனர் கோகுலகண்ணன், தலைவர் முருகேசன், தொண்டர்கள் சதீஷ், சேதுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம் தாயுமானசுவாமி மடத்தின் தலைவர் சுவாமி பரானந்தர் வரவேற்றுப் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில், திருப்புல்லாணி, கே.கே.நகர், எம்.ஜி.ஆர். நகர், அண்ணா நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 170 ஏழை மாணவ, மாணவியர்க்கு ரூ. 1.25 லட்சம் மதிப்பிலான சீருடைகளை, ராமநாதபுரம் ராமகிருஷ்ண மடத்தின் நிர்வாகி சுவாமி சுதபானந்தா வழங்கிப் பேசினார்.  இதில், ஞானதீப சேவா சங்கத் தொண்டர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai