சுடச்சுட

    

    ராமநாதபுரம் அருகேயுள்ள எட்டிவயல் கிராமத்தில் டேர் பவுண்டேஷன் அமைப்பின் சார்பில், விதைத் திருவிழா மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன் தலைமையில் நடைபெற்றது.

       தரணி இயற்கை விவசாயப் பண்ணையில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வெள்ளைச்சாமி முன்னிலை வகித்தார். முன்னோடி இயற்கை விவசாயி தரணி. முருகேசன் வரவேற்று, சிறுதானிய விதைகளை வயலில் விதைத்து விதைத் திருவிழாவை தொடக்கி வைத்துப் பேசினார்.

      தமிழகம் முழுவதும் இருந்து பங்கேற்ற விவசாயிகள் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன் இலவசமாக விதைப் பைகளை வழங்கி, விதைத் திருவிழா நடத்தப்படுவதன் நோக்கம் குறித்து பேசினார்.

      திருவண்ணாமலை சிறுதானிய மகத்துவ மைய பேராசிரியர் நிர்மலகுமாரி சிறுதானிய சாகுபடி நுட்பங்கள் என்ற தலைப்பிலும், மதுரை வேளாண்மைக் கல்லூரி உதவிப் பேராசிரியை மீனாட்சி மதிப்புக்கூட்டும் முறைகள் குறித்தும் பேசினர்.

      பணி ஓய்வுபெற்ற நீதிபதியும், முன்னோடி விவசாயியுமான சடையாண்டி விற்பனை வாய்ப்புகள் குறித்து விளக்கினார். கருத்தரங்க நிறைவில், விவசாயிகள் ஒருங்கிணைந்த பண்ணை முறையின் மூலம் நெல், காய்கறிகள், கோழி, முயல், மாடு ஆகியன வளர்க்க்கப்படும் இயற்கை விவசாயப் பண்ணையையும் பார்வையிட்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai