Enable Javscript for better performance
அப்துல் கலாம் சமாதி வளாகத்தில் மத்திய பாதுகாப்பு துறை கூடுதல் செயலர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    அப்துல் கலாம் சமாதி வளாகத்தில் மத்திய பாதுகாப்பு துறை கூடுதல் செயலர் ஆய்வு

    By ராமேசுவரம்  |   Published on : 19th July 2016 06:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்தியக் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் நினைவு தினத்தை முன்னிட்டு சமாதி அமைந்துள்ள வளாகப் பகுதியில் மத்திய பாதுகாப்பு துறை கூடுதல் செயலர் திங்கள் கிழமை ஆய்வு செய்தார். 

    ராமேசுவரம் அருகே பேய்க்கரும்பு பகுதியில் இந்திய குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் சமாதி அமைந்துள்ளது. கலாமின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இம்மாதம் 27-ஆம் தேதி வருவதையொட்டி நினைவு தின நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு மத்திய அரசும், கலாம் குடும்பத்தினரும் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன.

    விழா பாதுகாப்புக் குறித்தும், கலாம் வாழ்க்கை வரலாறு புகைப்படக் கண்காட்சி, அறிவுசார் மையம் அமைத்தல் உள்ளிட்ட திட்டப்பணிகள் தொடங்குவதற்கான இடங்களை பார்வையிடுவதற்கும் மத்திய பாதுகாப்புதுறை கூடுதல் செயலர் ராமகிருஷ்ணராவ் திங்கள்கிழமை ராமேசுவரம் வந்தார்.

     சமாதி வளாகப் பகுதிகள், சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகள், சாலைகள், தனியார் நிலங்கள் குறித்தும், மாநில அரசு கூடுதலாக வழங்கவுள்ள தென்குடா பகுதியிலுள்ள நிலங்களையும் அவர் பார்வையிட்டார். பின்னர்  வருவாய்த்துறை அதிகாரிகளுடனும், அப்துல்கலாமின் பேரன் சேக்சலீம் உள்ளிட்டோருடனும் அவர் ஆலோசனை நடத்தினார்.

    சிலை அமைக்க நடவடிக்கை: சமாதி வளாகத்தில் மத்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டுத் துறையின் சார்பில் கலாமின் 7 அடி உயர வெண்கலச் சிலை அமைக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜூலை 27-ஆம் தேதி சிலை திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai