சுடச்சுட

  

  பரமக்குடியில் மாவட்ட அதிமுக சார்பில் திங்கள்கிழமை உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

      கூட்டத்திற்கு மாவட்டச் செயலர் எம்.ஏ.முனியசாமி தலைமை வகித்தார். நகர்மன்றத் தலைவர் டி.என்.ஜெய்சங்கர், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆ.பாலுச்சாமி, தலைமைக் கழக பேச்சாளர் எம்.கே.ஜமால், நயினார்கோவில் ஒன்றியச் செயலர் பா.குப்புச்சாமி முன்னிலை வகித்தனர். மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் கே.அப்துல்மாலிக் வரவேற்றார்.    மாநில மகளிர் அணி இணைச்செயலாளர் எம்.கீர்த்திகா சிறப்புரையாற்றினார். நகர்மன்றம், ஊராட்சி ஒன்றியம், ஊராட்சி மன்றங்கள் என அனைத்திலும் கட்சி சார்பில் தகுதியானவர்களை நிறுத்த வேண்டும் எனவும், அவர்களது வெற்றிக்கு கட்சி நிர்வாகிகள் அயராது பாடுபட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. நகர் செயலர் எஸ்.வி.கணேசன் நன்றி கூறினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai