சுடச்சுட

  

  பந்தயத்தில் வெற்றி பெற்ற புறா வளர்ப்போருக்கு பரிசளிப்பு

  By ராமநாதபுரம்  |   Published on : 19th July 2016 12:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராமநாதபுரம் ரேஸிங் ஹோமர் கிளப் சார்பில் 10 வது ஆண்டாக புறா பந்தயங்கள் 4 கட்டமாக நடத்தப்பட்டு வெற்றி பெற்ற புறாக்களை வளர்த்தோருக்கு பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  விழாவுக்கு ராமநாதபுரம் புறா பந்தய சங்கத்தின் நிர்வாக இயக்குநர் என்.ரமேஷ் தலைமை வகித்தார். சங்க நிர்வாகி எஸ்.மாரியப்பன், தலைவர் மங்களதாசன், செயலாளர் ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் முகம்மது நிஜாம் வரவேற்றுப் பேசினார்.

       ஆந்திர மாநிலம் கரீம்நகர் வரை 1000 கி.மீ. தூரம் தொடர்ந்து 5 நாள்கள் பறந்து சென்று, ஒட்டு மொத்த சாம்பியன் பரிசை கீழக்கரையை சேர்ந்த ஆனந்தனின் புறா பெற்றது. ஆனந்தனுக்கு சென்னை புறா பந்தய சங்க செயலாளர் எஸ்.பழனி சுழற்கோப்பையை பரிசாக வழங்கினார்.

    2-ஆவது பரிசை முகம்மது நிஜாமுக்கு திருச்சி புறா பந்தய சங்கச் செயலர் பிலிப் இன்பராஜூம், 3-ஆவது பரிசை கலைச்செல்வன் மற்றும் இப்திகார் அலி ஆகியோருக்கு மதுரை புறாப் பந்தய சங்க செயலர் பரந்தாமனும் வழங்கினர்.         புறா வளர்ப்பு, புறாப் பந்தயத்தில் ஏற்படும் இடர்ப்பாடுகள், உணவு விவரங்கள் குறித்து சங்க உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கு மூத்த நிர்வாகிகள் பதிலளித்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai