Enable Javscript for better performance
புதிய கொடிமரத்துக்கு தங்கப்பட்டைகள் புதுப்பிக்கும் பணிகள் தீவிரம்- Dinamani

சுடச்சுட

    

    புதிய கொடிமரத்துக்கு தங்கப்பட்டைகள் புதுப்பிக்கும் பணிகள் தீவிரம்

    By ராமேசுவரம்  |   Published on : 19th July 2016 12:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் புதிய கொடிமரத்துக்கு தங்கப்பட்டைகளை புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    ராமேசுவரம் திருக்கோயிலில் அம்மன் சன்னதி முன்பு அமைக்கப்பட்டிருந்த கொடிமரம் சேதமடைந்ததால் புதிய கொடிமரம் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. 40 அடி நீளத்தில் தேக்கு மரத்தால் ஆன புதிய கொடி மரத்தில் பொருத்துவதற்காக, பழைய கொடிமரத்திலிருந்து எடுக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட பட்டைகளை புதுப்பிக்கும் பணி கோயில் வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

    இம்மாத இறுதிக்குள் புதிய கொடிமரம் அமைக்கப்பட்டு, ஆடித் திருக்கல்யாண கொடியேற்றம் அதில் நடைபெறும் என கோயில் நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai