சுடச்சுட

  

  போலி விசா கொடுத்து ரூ.2.50லட்சம் மோசடி: ராமேசுவரம் மீனவர் எஸ்.பி.யிடம் புகார்

  By ராமநாதபுரம்  |   Published on : 19th July 2016 12:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிங்கப்பூருக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி ரூ.2.50 லட்சத்தைப் பெற்றுக்கொண்டு போலி விசா கொடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு ராமநாதபுரம் எஸ்.பி. மணிவண்ணனிடம் ராமேசுவரம் மீனவர் திங்கள்கிழமை மனு அளித்தார்.

     ராமேசுவரம் வேர்க்கோடு எம்.ஆர்.டி.நகரில் வசிக்கும் முனியாண்டி மகன் எம்.காசிநாதன். மீனவரான இவர் ராமநாதபுரம் எஸ்.பி. என். மணிவண்ணனிடம் அளித்துள்ள புகார் மனு:

  அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த கருப்பு என்ற கருப்பையா என்னிடம் சிங்கப்பூருக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி ரூ.2.50லட்சத்தை கடந்த 19.4.2016 அன்று பெற்றுக் கொண்டார். அவர் வழங்கிய விசாவை இணையத்தின் மூலம் சரிபார்த்தபோது அது போலியானது எனத் தெரிய வந்தது. அதன் பின்னர் அவர் தலைமறைவாகிவிட்டார். எனவே என்னிடம் பணமோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தைப் பெறறுத் தர வேண்டும் என அப்புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai