Enable Javscript for better performance
மனைவி வெட்டி கொலை: கணவர் தலைமறைவு- Dinamani

சுடச்சுட

    

    பார்த்திபனூர் அருகே திங்கள்கிழமை மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த கணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

    பார்த்திபனூர் காவல் சரகத்துக்குள்பட்ட கீழப்பார்த்திபனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்குப்பாண்டி(45). இவரது மனைவி இந்துராணி(42). 2 பெண்கள் உள்ளனர். ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆகிவிட்டது. மற்றொரு பெண் திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

    சங்குப்பாண்டியும் இந்துராணியும் கூலி வேலை செய்து வந்தனர். இருவரிடையை அடிக்கடி தகராறு நடக்குமாம். திங்கள்கிழமை காலை இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் சங்குப்பாண்டி அவரது மனைவியை அரிவாளால் தலைப்பகுதியில் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த இந்துராணியை அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் பரமக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர், உயர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இந்துராணி உயிரிழந்தார்.  இதுகுறித்து பார்த்திபனூர் காவல் நிலையத்தில் இந்துராணியின் உறவினர் மலைச்சாமி அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் குணசேகரன் வழக்குப் பதிந்து சங்குப்பாண்டியை தேடி வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai