சுடச்சுட

    

    ராமேசுவரத்தில் பயணிகள் தங்கும் விடுதி: காணொலிக் காட்சி மூலம் முதல்வர் திறப்பு

    By ராமேசுவரம்  |   Published on : 19th July 2016 12:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமேசுவரத்தில் சுற்றுலாத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய தங்கும் விடுதியை தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

        ராமேசுவரத்தில் சுற்றுலாத்துறை சார்பில் புதிய தங்கும் விடுதி ரூ. 2 கோடி மதிப்பில்  கட்டப்பட்டது. இந்த விடுதியை தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

        இந்த நிகழ்ச்சியை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் சுற்றுலாத்துறை மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நிகழ்ச்சிக்கு ஆட்சியர் நடராஜன் தலைமை வகித்து பொதுமக்கள் சார்பில் தமிழக முதல்வருக்கு காணொலி காட்சி மூலம் நன்றி தெரிவித்தார்.

       நிகழ்ச்சியில், ராமேசுவரம் சுற்றுலாத் துறை அலுவலர் பாலசுப்பிரமணியன், விடுதி மேலாளர் குணேஸ்வரன், வட்டாட்சியர் ரத்தினவள்ளி, நகராட்சி ஆணையர் ஜெயராமராஜா, நகர்மன்றத் தலைவர் அர்ச்சுனன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai