Enable Javscript for better performance
இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேசுவரம் மீனவர்கள் ஜூலை22 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேசுவரம் மீனவர்கள் ஜூலை22 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்

    By ராமேசுவரம்  |   Published on : 20th July 2016 12:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி ஜூலை 22 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என ராமேசுவரத்தில் செவ்வாய்க்கிழமை  நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

        ராமேசுவரம் மீனவர் சங்க அவசர ஆலோசனை கூட்டம் துறைமுக பகுதியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு துறைமுக மீனவ சங்கத் தலைவர் என்.ஜெ.போஸ் தலைமை வகித்தார்.

       கூட்டத்தில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் தமிழக  மீனவர்கள் 77 பேரையும், 111 படகுகளையும் விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் மீது மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜூலை 22முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது, ஜூலை 26ஆம் தேதி ராமேசுவரம் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது, ஜூலை 28இல் தங்கச்சிமடத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

      இந்த கூட்டத்தில் மீனவ சங்க தலைவர் எமரிட், ஜேசுராஜா, சகாயம்,தட்சிணாமூர்த்தி, உள்பட மீனவ சங்க நிர்வாகிகளும், மீனவர்களும் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai