Enable Javscript for better performance
திருவாடானை முத்துமாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    திருவாடானை முத்துமாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா

    By திருவாடானை  |   Published on : 20th July 2016 03:11 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாடானை வடக்கு வீதியில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் செவ்வாய்க்கிழமை பூக்குழி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான கோயில் திருவிழா கடந்த 12ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. அதையடுத்து, தினமும் இரவு அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.

      விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பால்காவடி, மயில் காவடி, பறவைக் காவடி எடுத்து பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai