சுடச்சுட

  

  பாம்பன் தெற்கு கடலோரப் பகுதியில் கரை ஒதுங்கிய அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைப்பற்றினர்.

    பாம்பன் தெற்குவாடி கடற்கரைப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கியது. இது குறித்து தகவலறிந்த மண்டபம் பகுதியிலுள்ள தமிழக  கடலோரப் பாதுகாப்பு போலீஸார் வந்து  சடலத்தை கைப்பற்றி சோதனை நடத்தினர்.

    சோதனையில், இறந்து கிடந்தவர் வெள்ளை ஊதா வர்ணத்தில் கட்டம் போட்ட சட்டையும், சட்டை காலரில் திருக்காட்டுப்பள்ளி என ஸ்டிக்கர் அச்சிடப்பட்டிருந்ததும், 45 வயது மதிக்கதக்க நபர் எனவும் தெரியவந்தது. பின்னர், போலீஸார் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ராமேசுவரம் அரசு மருத்து மனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai