சுடச்சுட

    

    ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் சாலைப் பாலத்திலிருந்து கரூரைச் சேர்ந்த பெண் கடலில் குதித்து செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

      கரூர் பகுதியை சேர்ந்த ராமசாமி மனைவி விஜயலட்சுமி(55). இவர் பாம்பன் சாலைப் பாலம் பகுதிக்கு திங்கள்கிழமை மாலை வந்துள்ளார். பின்னர் பாலத்திலிருந்து கடலில் குதித்தார்.   இது குறித்து தகவலறிந்து வந்த பாம்பன் போலீஸார் அப்பெண் விட்டுச்சென்ற பையை கைப்பற்றி சோதனை செய்தனர். சோதனையில் 570 ரூபாய் பணமும், செல்லிடப்பேசியும், அடையாள அட்டையும் இருந்தது.

      இந்நிலையில் பாம்பன் குந்துகால் கடல் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஒரு பெண்ணின் சடலம் கரை ஒதுங்கியதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற போலீஸார் சடலத்தை கைப்பற்றினர். பின்னர் அடையாள அட்டையை வைத்து சோதனை செய்தபோது பாலத்திலிருந்து குதித்த விஜயலட்சுமி என தெரியவந்தது.

      பின்னர், சடலத்தை பிரேத பரிசோதனைகாக ராமேசுவரம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

      அதன் பேரில் அங்கு வந்த விஜயலட்சுமியின் மகன் சிவா, குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் மன அழுத்தத்தில் விஜயலட்சுமி இருந்ததாகவும், அதனால் ராமேசுவரம் கோயிலுக்கு சென்று வருவதாக தெரிவித்துவிட்டு வந்ததாக போலீஸாரிடம் தெரிவித்தார்.     பின்னர் விஜயலட்சுமியின் சடலத்தை போலீஸார் அவரது மகன் சிவாவிடம் ஒப்படைத்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai