சுடச்சுட

    

    பாம்பன் ரயில் பாலம் தண்டவாளப் பகுதியில் சீரமைப்புப் பணிகள்

    By ராமேசுவரம்  |   Published on : 20th July 2016 12:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாம்பன் ரயில் பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள தண்டவாளம் மற்றும் தூக்குபாலம் பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

       பாம்பன் கடல் பகுதியில் 2 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் இரும்பு கர்டர்கள், அதற்கு மேல் பொருத்தப்பட்டுள்ள தண்டவாளங்கள் மற்றும் கப்பல் கடந்து செல்லும்போது திறந்து மூடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தூக்கு பாலம் ஆகிய பகுதிகளின் தன்மை குறித்தும்,ரயில் பாலத்தில் செல்லும்போது ஏற்படும் அதிர்வு தன்மைகள் குறித்தும் அவ்வப்போது ரயில்வே பொறியாளர்கள் ஆய்வு செய்து கண்காணித்து வருகின்றனர்.

      அதன்படி, செவ்வாய்க்கிழமை ரயில் பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள தண்டவாளங்கள் கடலின் உப்பு காற்றால் அரிப்புத் தன்மை ஏற்பட்ட பகுதிகளையும், ரயில்கள் செல்லும்போது ஏற்படும் அதிர்வுகளால் தண்டவாளத்திற்கும், இரும்பு கர்டர்களுக்கும் இடையில் பொருத்தப்பட்டுள்ள ஜாயிண்டிங் போல்டு, வளைவு பிடிமான பூட்டு ஆகியவற்றை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது.

      அதேபோல் தூக்குபாலத்தில் துருப்பிடித்த பகுதியை நீக்கி புதியதாக இரும்பு பட்டைகள் இணைக்கும் பணிகளும், வர்ணம் பூசும் பணிகளும் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai