Enable Javscript for better performance
ராமகிருஷ்ண மடத்தில் குருபூர்ணிமா நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    ராமகிருஷ்ண மடத்தில் குருபூர்ணிமா நிகழ்ச்சி

    By ராமநாதபுரம்  |   Published on : 20th July 2016 12:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் ராமகிருஷ்ண மடத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமை குருபூர்ணிமா நிகழ்ச்சி நடைபெற்றது.

      மகாபாரதத்தை எழுதிய வேதவியாசரின் பிறந்த நாளை குருபூர்ணிமாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் ராமகிருஷ்ண மடத்தில் சுவாமி.சுதபானந்தா தலைமையில் அதிகாலையில் மங்கள ஆரத்தி, சுப்ரபாதம் மற்றும் வேதபாராயணம் ஆகியன தொடங்கின. பின்னர் ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாம பாராயணமும் அதனைத் தொடர்ந்து பஜனைகளும், ஸ்ரீராமகிருஷ்ண அஷ்டோத்திர அர்ச்சனையும் நடைபெற்றது.

       இதனையடுத்து சுவாமி.சுதபானந்தா பேசுகையில், நான்கு வேதங்களையும,18 புராணங்களையும் தொகுத்து முறைப்படுத்தியவர் வேதவியாசர். மகாபாரதம்,ஸ்ரீமத் பாகவதம் ஆகியனவற்றை இயற்றிய பெருமைக்குரியவர்.

     அவரது பிறந்த நாளைத் தான் நாடெங்கும் குருபூர்ணிமாவாக கொண்டாடி வருவதாக தெரிவித்தார்.   பின்னர் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

      விழாவில் பாஜக மாவட்ட துணைத் தலைவர் வைகிங்.எம்.எஸ்.கருணாநிதி,பணி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பி.கே.மணி, ஞானதீப சேவா சங்கத் தலைவர் கோகுலகண்ணன், பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai