சுடச்சுட

  

  ராமநாதபுரத்தில் புத்தகத் திருவிழா ஜூலை 25இல் ஆலோசனைக் கூட்டம்

  By ராமநாதபுரம்  |   Published on : 20th July 2016 12:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராமநாதபுரம் ரோட்டரி மகாலில் ஜூலை 25 ஆம் தேதி (திங்கள்கிழமை)புத்தகத் திருவிழா நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.

    இது குறித்து, கலை இலக்கிய ஆர்வலர் சங்கத்தின் தலைவர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா, செயலர் டாக்டர் வான்தமிழ் இளம்பருதி ஆகியோர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டு செய்திக் குறிப்பு:

     பின்தங்கிய மாவட்டமான ராமநாதபுரத்தில் இதுவரை 3 புத்தகத் திருவிழா நடத்தப்பட்டு, அவை ஒவ்வொன்றிலும் தலா ரூ. 1 கோடிக்கு மேல் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 4 ஆவது புத்தகத் திருவிழாவை அக்டோபர் மாதக் கடைசி வாரத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

     இதற்கான ஆலோசனைக் கூட்டம், ஜூலை 25 ஆம் தேதி காலை 10 மணிக்கு ரோட்டரி மகாலில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பொதுமக்கள், புத்தக ஆர்வலர்கள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு, ஆலோசனைகள் வழங்குமாறும் புத்தகத் திருவிழாவை நடத்த முழு ஒத்துழைப்பு நல்குமாறும் அச்செய்திக் குறிப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai