Enable Javscript for better performance
ராமநாதபுரம் நகரை தூய்மையாக வைத்திருக்க ஆட்சியர் வேண்டுகோள்- Dinamani

சுடச்சுட

    

    ராமநாதபுரம் நகரை தூய்மையாக வைத்திருக்க ஆட்சியர் வேண்டுகோள்

    By ராமநாதபுரம்  |   Published on : 20th July 2016 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் நகராட்சிப் பகுதிகளில் குப்பைகள் சேர்ந்து விடாமல் எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள்ளுமாறு, மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன் செவ்வாய்க்கிழமை நகராட்சி அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

    ராமநாதபுரம் நகரில் வனசங்கரி அம்மன் கோயில் தெரு, தாயுமான சுவாமி கோயில் தெரு, காளிகாதேவி அம்மன் கோயில் தெரு மற்றும் அரசு மகளிர் கல்லூரி ஆகிய பகுதிகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக் கழிப்பிடக் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றை, மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள எம்.எஸ்.கே. பூங்காவை புதுப்பித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வருமாறும், தெருக்களில் குப்பைகள் தேங்கி சுகாதாரச் சீர்கேடு ஏற்படாமல் நகரை எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள்ளவேண்டும் என்று, நகராட்சி அதிகாரிகளை ஆட்சியர் கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின்போது, நகராட்சி உதவிப் பொறியாளர் எம். சுப்பிரமணியபிரபு, சுகாதார அலுவலர் ஹரிதாஸ், குழாய்களுக்கான ஆய்வாளர் கே. முனீஸ்வரன் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai