Enable Javscript for better performance
ராமேசுவரத்தில் தமிழர் தேசிய முன்னணி ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ராமேசுவரத்தில் தமிழர் தேசிய முன்னணி ஆர்ப்பாட்டம்

    By ராமேசுவரம்  |   Published on : 20th July 2016 12:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமேசுவரம் நகராட்சியைக் கண்டித்து தமிழர் தேசிய முன்னணியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

     ஆர்ப்பாட்டத்துக்கு தமிழர் தேசிய முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் கண்.இளங்கோ தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பசுமலை முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ராமேசுவரம் திட்டக்குடி பகுதி முதல் கெந்தமாதனபர்வதம் வரையில் பல ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படும் சாலையை சீரமைக்க வேண்டும். மல்லிகை நகர் பகுதியில் சாலை அமைக்கவும், ராமேசுவரம் பகுதியில் பல பகுதியில் சேதமடைந்து வீணாகி வரும் காவிரிகூட்டுக் குடிநீர் குழாய்களை சீரமைத்து நகராட்சி பகுதிகளில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும்,பொதுமக்களின் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில் மெத்தனமாக செயல்படும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

     இதில், தமிழர் தேசிய முன்னணியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் நாகேஸ்வரன் ,ராமேசுவரம் நகர் செயலாளர் சூரியகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai