சுடச்சுட

    

    திருவாடானை அருகே வேனும் சரக்கு வாகனமும் மோதியதில் பெண் உயிரிழந்தார். 11 பேர் காயமடைந்தனர்.

      திருவாடானை அருகே சி கே மங்கலத்தில் உள்ள தனியார் நூற்பாலையிலிருந்து தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு  ஒரு வேன் திங்கள்கிழமை இரவு புறப்பட்டது. இந்த வேன் சிகே மங்களம் ரவுண்டானா அருகே வந்தபோது தொண்டியில் இருந்து மீன் ஏற்றி வந்த சரக்கு வாகனமும் வேனும் மோதிக் கொண்டன.

       வேனில் இருந்த கோட்டைகாடு பகுதியை சேர்ந்த விஜயா (31) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், பாண்டியம்மாள் (30), சங்கீதா (22), சுதா (28), தனம் (35),வேன் ஓட்டுநர் ராஜேஷ்கண்ணா(31) உள்பட 11 பேர் காயமடைந்தனர். அனைவரும் திருவாடானை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

      தகவலறிந்த திருவாடானை போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி, வழக்குப் பதிந்து சரக்கு வாகன ஓட்டுநர் நாகூரை சேரந்த முகம்மது அலி மகன் செய்யது அலி(32)என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai