Enable Javscript for better performance
அப்துல் கலாம் சமாதியில் தமிழக வருவாய்த் துறை செயலர் ஆய்வு - Dinamani

சுடச்சுட

    

    அப்துல் கலாம் சமாதியில் தமிழக வருவாய்த் துறை செயலர் ஆய்வு

    By ராமேசுவரம்  |   Published on : 21st July 2016 01:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் சமாதி பகுதியில் மத்திய அரசு அமைக்கவுள்ள கண்காட்சி மற்றும் அறிவுசார் மையத்துக்கு தேவையான நிலங்களை வழங்குவதற்காக, தமிழக அரசின் வருவாய்த் துறை செயலர் அப்பகுதியில் புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

      ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் ஊராட்சிக்குள்பட்ட பேக்கரும்பு என்ற இடத்தில் அப்துல் கலாமின் சமாதி அமைந்துள்ளது.

     இங்கு, அவரது வாழ்க்கை வரலாறு குறித்து மாணவர்களும், இளைஞர்களும் பயன்பெறும் வகையில் கண்காட்சியும், அறிவுசார் மையம், நினைவு மண்டபம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

      எனவே, இதற்கு தேவைப்படும் நிலங்களை மாநில அரசு வழங்க இருப்பதால், கலாமின் சமாதி பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்ய தமிழக அரசின் வருவாய்த் துறைச் செயலர் சந்திரமோகன் வருகை தந்தார். சமாதி மற்றும் சுற்றுப் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த அவர், பின்னர் மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன் மற்றும்   வருவாய்த் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai