சுடச்சுட

  

  கமுதி பசும்பொன் தேவர் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை

  By முதுகுளத்தூர்  |   Published on : 21st July 2016 01:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கமுதி பசும்பொன் தேவர் நினைவுக் கல்லூரிக்கு வியாழக்கிழமை முதல் காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து சமுதாயத் தலைவர்களின் சிலைகளைச் சுற்றி பாதுகாப்புக்காக இரும்புக் கம்பி அமைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், பசும்பொன் தேவர் கல்லூரியின் நுழைவுவாயிலில் உள்ள தேவர் சிலைக்கும் இரும்புக் கம்பி அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இரும்புக் கம்பியை அகற்றக் கோரி, மாணவர்கள் 2 நாள்களாக வகுப்புகளுக்குச் செல்லாமல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

   அப்போது, சில மாணவர்கள் கம்பி வேலிக்கு போடப்பட்டிருந்த பூட்டை உடைத்தனர். இதையடுத்து, கல்லூரி முதல்வர் மணிமாறன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், உடன்பாடு ஏற்படாததால், அவர் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அளித்து அறிவித்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai