சுடச்சுட

    

    திருவாடானை தாலுகா, எஸ்.பி.பட்டினம் அருகே வெள்ளையபுரத்தில் கடந்த பல நாள்களாக 6 இரு சக்கர வாகனங்கள் கேட்பாரற்றுக் கிடந்துள்ளது. இது குறித்து தகவலறிந்த எஸ்.பி.பட்டினம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று இரு சக்கர வாகனங்களைக் கைப்பற்றினர். பின்னர், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    பைக் திருடியவருக்கு 6 மாதம் சிறை:   இந்நிலையில், திருவாடானை அருகே மாணிக்கம்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த  கைலாசம் (40) என்பவரது இரு சக்கர வாகனம் கடந்த 14.5.2016 இல் திருடுபோனது. புகாரின்பேரில், திருவாடானை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.

      அப்போது, மேலணை ஊரணிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த கருணாசேசு (49)என்பவரை போலீஸார் கைது செய்து, அவரிடமிருந்து இரு சக்கர வாகனத்தை கைப்பற்றினர். பின்னர், அவரை செவ்வாய்க்கிழமை திருவாடானை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

     வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளி கருணாசேசுவுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்தார். அதையடுத்து, கருணா சேசு சிறையில் அடைக்கப்பட்டார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai