சுடச்சுட

  

  செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனையை தடுக்க கோரிக்கை

  By பரமக்குடி  |   Published on : 21st July 2016 01:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பரமக்குடி பகுதியில் கார்பைடு கல்லால் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கல் விற்பனை செய்வதை தடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  பரமக்குடி சின்னக்கடைத் தெரு, மீன்கடைத் தெரு, உழவர் சந்தை, பெருமாள் கோயில் தெரு பகுதியில் கிடங்குகளில் கார்பைடு கல்லால் மாம்பழங்கள் பழுக்க வைக்கப்பட்டு விற்பனை செய்கின்றனர். இதை சில்லறை வியாபாரிகள் வாங்கி விற்பனை செய்கின்றனர். அதனை உண்ணும் பொதுமக்களுக்கு நோய் உண்டாகும் சூழல் உள்ளது. இதனை தடுக்க கோரி நகராட்சி சுகாதாரத் துறை, சுகாதார இயக்குநர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் பலனில்லை. மேலும், வேளாண்துறை அதிகாரிகளால் பரிந்துரை செய்யப்பட்ட ரசாயனபவுடரைத்தான் மொத்த வியாபாரிகள் பயன்படுத்துகின்றனர் எனக் கூறி தட்டிக்கழிக்கின்றனர்.

  ஆகவே, பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் செயற்கைமுறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை விற்பனை செய்வதை தடுக்க மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai