சுடச்சுட

    

    திருப்புல்லாணியில் 63 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்: கூடுதல் விலைக்கு விற்றவர் கைது

    By ராமநாதபுரம்  |   Published on : 21st July 2016 01:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகே கோரைக்கூட்டம் கிராமத்தில் 63 ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருந்தவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

       கோரைக்கூட்டம் கிராமத்தில் வசிக்கும் செய்யது முஸ்தபா மகன் முகம்மது கான் (55) என்பவரது வீட்டில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு, கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக, பறக்கும்படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், பறக்கும்படை வட்டாட்சியர் ரவிராஜ், துணை வட்டாட்சியர்கள் சதீஷ், ஜமால் முகம்மது, வருவாய் ஆய்வாளர் காசிநாததுரை ஆகியோர் முகம்மது கானின் வீட்டில் சோதனை நடத்தினர்.

     அப்போது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 63 மூட்டைகளையும் பறிமுதல் செய்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்குக்கு அனுப்பி வைத்தனர்.

      இதையடுத்து, விருதுநகர் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் முகம்மது கான் ஒப்படைக்கப்பட்டார். போலீஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai