சுடச்சுட

    

    நீர்வழிப் பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

    By ராமநாதபுரம்  |   Published on : 21st July 2016 01:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரத்தில் நீர்வழிப்பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

    இதுகுறித்து கட்சியின் மண்டல துணைச் செயலாளர் கே.ராஜூ ராமநாதபுரம் வட்டாட்சியருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்திருப்பது:

    ராமநாதபுரத்தில் உள்ள ஏரி,குளம்,குட்டை,ஊரணி,கண்மாய் மற்றும் அவற்றிற்கான நீர்வழிப் பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் கால்நடைகள் முழுமையாகப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

    தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வரும் நிலையில் நீர்நிலைகளை ஆக்கிரமிக்க அனுமதிக்க கூடாது என உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. எனவே, நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai