Enable Javscript for better performance
ராமநாதபுரம் பொறியியல் கல்லூரியில் கல்விக் கடன் வழங்கும் விழா- Dinamani

சுடச்சுட

    

    ராமநாதபுரம் பொறியியல் கல்லூரியில் கல்விக் கடன் வழங்கும் விழா

    By ராமநாதபுரம்  |   Published on : 21st July 2016 01:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் கனரா வங்கியின் சார்பில், கல்விக் கடன் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

      அக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, கல்லூரி முதல்வர் பி. மாரிமுத்து தலைமை வகித்தார்.  கல்லூரியின் துணை முதல்வர் பெரியசாமி, கனரா வங்கி அலுவலர்கள் பாலுச்சாமி, தாஹீர் அஹமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். கனரா வங்கியின் நிர்வாக அலுவலர் தெய்வேந்திரன் வரவேற்றார்.  கனரா வங்கியின் ராமநாதபுரம் கிளை முதன்மை மேலாளர் ஆர். கருப்பையா, முதல்கட்டமாக மாணவ, மாணவியரில் 15 பேருக்கு கல்விக் கடன்கள் வழங்கினார்.  கல்லூரியில் பயில்வோருக்கு கனரா வங்கி கல்விக் கடன்கள் வழங்குவதாக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருப்பதாகவும், புதன், வியாழக்கிழமைகளில் மொத்தம் 500 பேருக்கு கல்விக் கடன்கள் தகுதியின் அடிப்படையில் வழங்க இருப்பதாகவும், ஆர். கருப்பையா பேசும்போது குறிப்பிட்டார்.

      இதில், கல்விக் கடன்கள் பற்றிய சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது. விழாவில், மாணவர்கள், பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai