சுடச்சுட

  

  ஸ்ரீவடக்கு வாசல் செல்வி அம்மன் கோயிலில் முளைப்பாரி ஊர்வலம்

  By முதுகுளத்தூர்  |   Published on : 21st July 2016 01:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  முதுகுளத்தூர் அருள்மிகு ஸ்ரீவடக்கு வாசல் செல்வி அம்மன் கோயில் 40 ஆம் ஆண்டு பூச்சொரிதல் மற்றும் ஆடிப் பெருக்கை முன்னிட்டு, புதன்கிழமை முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.

    இதை முன்னிட்டு, பல்வேறு கலைநிகழ்ச்சிகள், வாணவேடிக்கைகள், நாடகம், ஆன்மிகச் சொற்பொழிவு, பட்டிமன்றம் உள்ளிட்டவை நடைபெற்றன. புதன்கிழமை இரவு நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு, செல்வி அம்மன் கோயிலில் இருந்து அய்யனார் கோயில், வழிவிடுமுருகன்  கோயில், முளைக்கொட்டு திருணை, சுப்பிரமணியர் கோயில் வழியாக முக்கிய வீதிகளில் ஊர்வலமாகச் சென்றனர். பின்னர், முளைப்பாரியை சங்கரபாண்டி ஊருணியில் கரைத்தனர்.   திருவிழாவையொட்டி, பக்தர்கள் பொங்கல் வைத்தும், மொட்டையடித்தும் அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர். இதில், சுற்றியுள்ள கிராம மக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai