சுடச்சுட

  

  இலங்கை சிறையிலுள்ள 42 ராமேசுவரம் மீனவர்களுக்கு ஆக.4 வரை சிறைக்காவல் நீட்டிப்பு

  By ராமேசுவரம்  |   Published on : 22nd July 2016 06:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இலங்கை சிறையிலுள்ள ராமேசுவரம், பாம்பன் பகுதி மீனவர்கள் 42 பேருக்கு, ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை சிறைக்காவலை மீண்டும் நீட்டித்து, அந்நாட்டு நீதிமன்றங்கள் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளன.

        ராமேசுவரம், பாம்பன் பகுதிகளிலிருந்து கடந்த மே, ஜூன், ஜூலை மாதங்களில் மீன்பிடிக்கச் சென்ற 42 மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து, ஊர்க்காவல் துறை மற்றும் மன்னார் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தினர்.

   பின்னர், நீதிமன்ற உத்தரவின்பேரில் யாழ்பாணம் சிறையில் 25 மீனவர்களையும், வுவனியா சிறையில் 17 மீனவர்களையும் அடைத்தனர்.

    சிறையில் இருந்து வந்த 42 மீனவர்களுக்கும் பலமுறை காவல் நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில், ஜூலை 21 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஊர்க்காவல் துறை மற்றும் மன்னார் நீதிமன்றங்கள் உத்தரவிட்டிருந்தன. அதன்பேரில், 42 மீனவர்களையும் போலீஸார் நீதிமன்றங்களில் வியாழக்கிழமை ஆஜர்படுத்தினர்.

        அங்கு, மீனவர்களை விசாரணை செய்த இரு நீதிமன்ற நீதிபதிகளும், ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை சிறைக் காவலை மீண்டும் நீட்டித்து உத்தரவிட்டனர். அதன்பேரில், 42 மீனவர்களையும் போலீஸார் மீண்டும் அந்தந்த சிறையில் அடைத்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai