சுடச்சுட

    

    பன்றி மீது பைக் மோதி ஒருவர் சாவு: இருவர் காயம்

    By ராமேசுவரம்  |   Published on : 22nd July 2016 07:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமேசுவரத்தில் புதன்கிழமை இரவு சாலையின் குறுக்கே வந்த பன்றி மீது மோதியதில், இரு சக்கர வாகனத்தில் வந்த மூவரில் ஒருவர் உயிரிழந்தார்.

       ராமேசுவரம் திருவள்ளுவர் பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகன் மோகன்தாஸ் (21), அருணாச்சலம் மகன் கிருஷ்ணன் (19), குமார் மகன்  மாரிச்செல்வம் (17) ஆகிய மூவரும், அப்பகுதியிலிருந்து இரு சக்கர வாகனத்தில் ராமேசுவரம் பேருந்து நிலையத்துக்கு புதன்கிழமை நள்ளிரவில் சென்றுள்ளனர்.

      இவர்கள், ராமேசுவரம் லெட்சுமணன் தீர்த்தம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, சாலையின் குறுக்கே பன்றி ஓடியுள்ளது. உடனே, இரு சக்கர வாகனத்தை ஓட்டிவந்த மோகன்தாஸ் வாகனத்தை நிறுத்த முயற்சித்துள்ளார். ஆனால், கட்டுப்பாட்டை இழந்து மூவரும் கீழே விழுந்துள்ளனர். இதில், மோகன்தாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த மற்ற இருவரும் ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் கிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டனர்.

      இது குறித்து, ராமேசுவரம் நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.                                                  

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai