சுடச்சுட

    

    ராமநாதபுரத்தில் ஸ்ரீனிவாசப் பெருமாள் திருக்கல்யாணம்

    By ராமநாதபுரம்  |   Published on : 22nd July 2016 06:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் அருள்மிகு திரௌபதி அம்மன் திருக்கோயில் வளாகத்தில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் மற்றும் ஸ்ரீராமானுஜரின் ஆயிரமாவது ஜயந்தி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

       திருக்கல்யாணத்தை முன்னிட்டு, கோயில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் ஸ்ரீனிவாசப் பெருமாள்  எழுந்தருளினார். பின்னர், திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் பட்டாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

      முதலில் காப்புக் கட்டும் உற்சவமும், யாகசாலை பூஜைகளும் தொடங்கின. பின்னர், சுவாமிக்கு திருமணப் பட்டும், அம்மனுக்கு பட்டுச் சேலையும் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து, திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. அதையடுத்து, மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது.

       திருமண விழாவை நடத்துவதற்காக, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தைச் சேர்ந்த நிர்வாக அதிகாரிகள் வந்திருந்தனர்.  விழாவுக்கான ஏற்பாடுகளை, அருள்மிகு திரௌபதி அம்மன் கோயில் நிர்வாகக் குழு தலைவர் குருசாமி, செயலர் பூபதி, துணைச் செயலர் துளசிராமன், பொருளாளர் மேகநாதன், துணைத் தலைவர் சேகர், பாலமுருகன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.  விழாவில், ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் என். மணிவண்ணன், மாவட்ட ஜவுளி ரெடிமேட் சங்கத் தலைவர் வைகிங் எம்.எஸ். கருணாநிதி, ஆயிர வைசிய மகாஜன சபை தலைவர் எம்.எஸ். கேசவன், தொழிலதிபர்கள் வி.பி.எம்.கே. கருணாமூர்த்தி, தினேஷ்பாபு, உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.  இந்த வைபவத்தில், ராமநாதபுரம் நகர் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.   அனைத்து பக்தர்களுக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் பிரசாதமாக, மாங்கல்ய கயிறு, குங்குமம் ஆகியன வழங்கப்பட்டன. விழாவில், ராமானுஜரின் வாழ்வில் நடந்த அற்புதங்கள் பற்றிய சொற்பொழிவும் நடைபெற்றது.

      ராமநாதபுரம் ஏ.எஸ்.பி. எஸ். சர்வேஷ்ராஜ் தலைமையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai