சுடச்சுட

    

    ராமேசுவரம் திருக்கோயிலில் புதிய கொடிமரத்துக்கு பிரதிஷ்டை பூஜை

    By ராமேசுவரம்  |   Published on : 22nd July 2016 06:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமேசுவரம் திருக்கோயிலில் அம்மன் சன்னதி முன்பாக அமைக்கப்பட்டுள்ள தங்க முலாம் பூசப்பட்ட புதிய கொடிமரத்துக்கு பச்சை பட்டு அணிவித்து பிரதிஷ்டை பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

      ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி முன்பாக இருந்த சேதமடைந்த பழைய கொடிமரத்தை அகற்றிவிட்டு, புதிய கொடிமரம் புதன்கிழமை நிறுவப்பட்டது. இந்த புதிய கொடிமரத்துக்கு பிரதிஷ்டை பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

      இதையொட்டி, புதன்கிழமை மாலை திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி, அம்மனுக்கு வாஸ்து பூஜைகள் செய்து, புதிய கொடிமரம் முன்பு 9 கலசத்தில் புனித நீர் நிரப்பப்பட்டு, யாகசாலை பூஜையில் வைக்கப்பட்டது. பின்னர், திருக்கோயில் மூத்த குருக்கள் உதயகுமார் தலைமையில் கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகளுடன் முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கின.  வியாழக்கிழமை அதிகாலையில் கலச பூஜை, நவக்கிர பூஜை உள்ளிட்ட 9 பூஜைகளுடன் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. அதன்பின்னர், பூஜையில் வைக்கப்பட்ட புனித தீர்த்தத்தால் தங்க முலாம் பூசப்பட்ட புதிய கொடிமரத்துக்கு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து, கொடிமரத்துக்கு பச்சை பட்டு மற்றும் பட்டு வேட்டி அணிவித்து, சிறப்புப் பூஜைகள் மற்றும் தீபாராதனைகள்  நடைபெற்றன.  இந்நிகழ்ச்சியில், திருக்கோயில் தக்கார் குமரன் சேதுபதி, இணை ஆணையர் செல்வராஜ், உதவிக் கோட்டப் பொறியாளர் மயில்வாகனன், திருக்கோயில் கண்காணிப்பாளர்கள் ககாரீன்ராஜ், ராஜாங்கம், பாலசுப்பிரமணியன், நகர்மன்றத் தலைவர் அர்ச்சுனன், மீனவர் சங்கத் தலைவர் தேவதாஸ் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai