Enable Javscript for better performance
ஊராட்சி செயலர்கள் ஊதியத்தை உயர்த்த கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    ஊராட்சி செயலர்கள் ஊதியத்தை உயர்த்த கோரிக்கை

    By முதுகுளத்தூர்  |   Published on : 23rd July 2016 01:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கமுதி ஒன்றியத்துக்குள்பட்ட 52 ஊராட்சி செயலர்கள் ஊதியத்தை உயர்த்த வெள்ளிக்கிழமை கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

     ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஒன்றியத்தைச் சேர்ந்த 52 ஊராட்சி செயலர்கள், வழிவிட்ட அய்யனார் கோயில் வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.  கூட்டத்துக்கு, கமுதி ஒன்றிய ஊராட்சி செயலர்களின் தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார். செயலர் முத்துமாரி, பொருளாளர் காளிகண்ணன், வேப்பங்குளம் ஊராட்சி செயலர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இதில், ஊரக வளர்ச்சித் துறையில் குறைந்தபட்ச ஊதியமும், அதிக பணி சுமையாலும் முடக்கப்பட்டிருக்கும் 12,524 ஊராட்சி செயலர்களுக்கு இளநிலை உதவியாளர் நிலை ஊதியத்தை அரசு கருவூலம் மூலம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.   கோரிக்கையை நிறைவேற்றாதபட்சத்தில், உள்ளாட்சி தேர்தல் பணிகளை புறக்கணிக்கப் போவதாக ஊராட்சி செயலர்கள் அறிவித்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai