Enable Javscript for better performance
கத்தியை காட்டி மிரட்டல் விடுத்தவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    திருவாடானை தாலுகா, எஸ்.பி.பட்டினம் மேல்தெருவைச் சேர்ந்தவர் கலீல் ரகுமான் (53). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த அப்துல்வாஹித் (47)என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

      இந்நிலையில், வெள்ளிக்கிழமை கலீல் ரகுமான் வீட்டுக்குச் சென்ற அப்துல் வாஹித்  கத்தியை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டினாராம்.

     இதுகுறித்து, கலீல் ரகுமான் அளித்த புகாரின்பேரில், எஸ்.பி.பட்டினம் போலீஸார் வழக்குப் பதிந்து அப்துவாஹித்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai