சுடச்சுட

    

    திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் ஆடிவெள்ளி

    By திருவாடானை  |   Published on : 23rd July 2016 01:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாடானை தாலுகா, திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் ஆடி முதல் வெள்ளிக்கிழமை திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

       சிவகங்கை சமஸ்தானத்துக்கு உள்பட்ட மிகவும் பிரசித்திபெற்ற ஸ்ரீபாகம்பிரியாள் சமேத வல்மிகநாத திருக்கோயில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. இதையொட்டி, சிவகங்கை, காரைக்குடி, சிங்கம்புணரி, தேவகோட்டை, காளையார்கோவில், மானாமதுரை, இளையான்குடி, பரமக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

     மேலும், பலர் பாதயாத்திரையாக கோயிலுக்கு வந்திருந்து வழிபட்டனர்.

      பக்தர்களின் வசதிக்காக, தேவகோட்டை அரசுப் போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் உத்தரவின்பேரில், சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

    கோழி, சேவல் ஏலம் ரூ. 20 லட்சம்:   திருவெற்றியூரில் பாகம்பிரியாள் சமேத வல்மிகநாத சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் கோழி, சேவல்களை காணிக்கையாக நேர்ந்து விடுவது வழக்கம். இக்கோயிலில் கோழி, சேவல், விபூதி, குங்குமம், சந்தனம் ஆகியன ஆண்டுதோறும் ஏலம் விடப்படும். இந்த ஆண்டுக்கான ஏலம், இந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் ராமசாமி முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

      இதில், கோழி, சேவல் ரூ. 20 லட்சத்து 3 ஆயிரத்துக்கு ஏலம் போனது. தொடர்ந்து, பிரசாதம் ரூ. 2 லட்சத்து 2 ஆயிரத்துக்கும், விபூதி, குங்குமம் ரூ. 44, 500-க்கும், சந்தனம் ரூ. 21,400-க்கும் ஏலம் போனது.

      இவற்றில், கடந்த ஆண்டு ரூ. 50 லட்சத்துக்கு போன முடி ஏலத்தை தற்போது யாரும் எடுக்க முன்வராததால், ஏலம் ஒத்திவைத்து அறிவிக்கப்பட்டது.

     இதில், தேவஸ்தான மேலாளர் இளங்கோவன், தேவஸ்தான சரகக் கண்காணிப்பாளர் சரவண கணேசன், இந்து அறநிலையத் துறை ஆய்வாளர் சுந்தரேஸ்வரி, கெளரவக் கண்காணிப்பாளர் முத்துகண்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai