Enable Javscript for better performance
பாம்பன் தூக்குப் பாலத்தில் விசைப்படகு மோதியது- Dinamani

சுடச்சுட

    

    பாம்பன் தூக்குப் பாலத்தில் விசைப்படகு மோதியது

    By ராமநாதபுரம்  |   Published on : 23rd July 2016 01:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாம்பன் கடல் பகுதியில் வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற விசைப் படகு தூக்குப் பாலத்தில் மோதி நின்றது.

       பாம்பன் பகுதியையும், ராமேசுவரம் பகுதியையும் இணைக்கும் வகையில் பாம்பன் ரயில்வே பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இப் பகுதியில் பெரிய மீன்பிடி விசைப்படகுகள், வர்த்தகக் கப்பல்கள், இழுவைக் கப்பல்கள் உள்ளிட்டவை செல்லும்போது, பாலத்தின் நடுவே திறந்து, மூடும் வகையில் தூக்குப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

       இந்நிலையில், வெள்ளிக்கிழமை பாம்பனிலிருந்து தென்கடல் பகுதிக்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்கச் சென்றன. தென்கடல் பகுதியில் மீன்வரத்து மிகவும் குறைவாக இருந்ததால், 20-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள்  வடகடல் பகுதியில் மீன்பிடிக்க முடிவு செய்து, பாம்பன் தூக்குப் பாலத்தை கடந்தன. அவ்வாறு கடந்து சென்ற விசைப்படகுகளில் ஒன்று மட்டும் தூக்குப் பாலத்தின் மீது  மோதி செல்லமுடியாமல் நின்றது.   இதையறிந்த மற்ற படகுகளில் இருந்த மீனவர்கள், சுமார் அரை மணி நேரம் போராடி அந்தப் படகை மீட்டனர். 

      படகு மோதி நின்றதையும், அதை மீட்க மீனவர்கள் போராடியதையும் ராமேசுவரத்துக்கு சுற்றுலாவாக வந்த ஏராளமானோர் பாம்பன் சாலைப் பாலத்திலிருந்து வேடிக்கை பார்த்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai