சுடச்சுட

    

    ராமநாதபுரத்தில் அறிவியல் கண்காட்சியை ஆட்சியர் திறந்து வைத்தார்

    By ராமநாதபுரம்  |   Published on : 23rd July 2016 01:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பள்ளிக் கல்வித் துறை சார்பில், ராமநாதபுரம் லூயிஸ் லெவல் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் அறிவியல் கண்காட்சிப் போட்டி நடைபெற்றது.

       ராமநாதபுரம் வருவாய் மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவியர் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இக்கண்காட்சியை, ஆட்சியர் எஸ். நடராஜன் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்துப் பார்வையிட்டார்.

       கண்காட்சி தொடக்க விழாவுக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க. ஜெயக்கண்ணு தலைமை வகித்தார். ராமநாதபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் எம். உசேன்கான் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் ரெஜினாமேரி வரவேற்றுப் பேசினார். ராமநாதபுரம் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் ஜெ. சேசுரெத்தினம், பரமக்குடி மாவட்டக் கல்வி அலவலர் டி. மோகன்குமார், அறிவியல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ஜே. தங்ககனிமொழி ஆகியோரும் பங்கேற்று பேசினர். மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கா. குமார் நன்றி கூறினார்.  

      அறிவியல் கண்காட்சியில் 83 நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 49 மாணவர்கள், அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 18 மாணவர்கள், மெட்ரிக்குலேஷன் பள்ளிகளைச் சேர்ந்த 7 மாணவர்கள் என மொத்தம் 157 பேர் தங்களது படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai