சுடச்சுட

  

  ராமநாதபுரம் அரசு கல்லூரியில் ரத்த தான முகாம்

  By ராமநாதபுரம்  |   Published on : 23rd July 2016 01:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி ராமநாதபுரம் கிளையும், சேதுபதி அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டமும் இணைந்து, கல்லூரி வளாகத்தில் தன்னார்வ ரத்த தான முகாமை வெள்ளிக்கிழமை நடத்தின.

     இம்முகாமை, ராமநாதபுரம் ஏ.எஸ்.பி. எஸ். சர்வேஷ்ராஜ் தொடக்கி வைத்துப் பேசினார். கல்லூரி முதல்வர் எம். சின்னையா தலைமை வகித்தார். இந்தியன் ரெட்கிராஸ் அமைப்பின் மாவட்ட துணைத் தலைவர் எஸ். ஹாரூன் முன்னிலை வகித்தார்.

    கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் செந்தாமரை வரவேற்றுப் பேசினார்.

    ராமநாதபுரம் ரெட்கிராஸ் அமைப்பின் மாவட்டச் செயலர் எம். ராக்லாண்ட் மதுரம், பொருளாளர் சி. குணசேகரன் ஆகியோர் ரத்த தானத்தின் அவசியம் குறித்து பேசினர்.

    முகாமில், தன்னார்வத்துடன் ரத்த தானம் செய்த 52 பேருக்கு ரெட்கிராஸ் அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் எஸ். சுந்தரம், ஆர். கோவிந்தராஜ் ஆகியோர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினர். ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையின் ரத்த வங்கிப் பிரிவு அலுவலர் டாக்டர் க. ஷேக் அப்துல்லா தலைமையிலான மருத்துவக் குழுவினர், ரத்த சேகரிப்பு பணியை செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை, இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் மாவட்ட ரத்த தானப் பிரிவு தலைவர் எஸ். அய்யப்பன் தலைமையில், கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் என். செந்தில், கே. சரவணக்குமார் ஆகியோர் செய்திருந்தனர். கல்லூரிப் பேராசிரியர் அறிவழகன நன்றி கூறினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai