சுடச்சுட

    

    ராமேசுவரத்தில் ஆகஸ்ட்டில் ராமகிருஷ்ண தபோவனத்தின் 75-ஆவது ஆண்டு விழா

    By ராமேசுவரம்  |   Published on : 23rd July 2016 01:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்சி பகுதியிலுள்ள திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவனத்தின் 75 ஆவது ஆண்டு விழா, ராமேசுவரம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் ஆகஸ்ட் 5, 6, 7 ஆகிய மூன்று நாள்கள் நடைபெறவுள்ளதாக, ராமேசுவரம் ராமகிருஷ்ண மடத்தின் நிர்வாகி சுவாமி சாரதானந்த மஹராஜ்  வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

      இது குறித்து செய்தியாளர்களிடையே அவர் மேலும் தெரிவித்தது: திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவனம் தொடங்கப்பட்டு 74 ஆண்டுகள் நிறைவுபெற்று, 75 ஆவது ஆண்டு தொடங்கியுள்ளது. தபோவனத்தின் 75 ஆவது ஆண்டு விழா தமிழகத்திலுள்ள அனைத்துக் கிளைகளிலும் நடைபெற உள்ளது.

      இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழா ராமேசுவரம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியையொட்டி,  மண்டபம் ஒன்றியப் பகுதியிலுள்ள அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன.   மூன்று நாள்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு குறித்த கலை நிகழ்ச்சியும், கல்வி சார்ந்த கண்காட்சியும் நடைபெறும். இதில், தபோவனத்தைச் சேர்ந்தோர், மாநில அமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும், பொதுநல அமைப்பினரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்ள உள்ளனர் எனத் தெரிவித்தார்.

       அப்போது, விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக்குலேஷன் பள்ளியின் முதல்வர் சுரேஷ்குமார், ராமேசுவரம் வாழும்கலை அமைப்பின் தலைவர் தேவதாஸ் மற்றும் ராமேசுவரம் ரோட்டரி சங்கத் தலைவர் சுடலை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai