சுடச்சுட

  

  ராமேசுவரத்தில் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்: 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரம் பாதிப்பு

  By ராமேசுவரம்  |   Published on : 23rd July 2016 01:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இலங்கை சிறையிலுள்ள ராமேசுவரம் உள்ளிட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி, ராமேசுவரம் மீனவர்கள் வெள்ளிக்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.

      ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்பட தமிழக கடலோரப் பகுதிகளிலிருந்து கடந்த மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை, இலங்கைக் கடற்படையினர் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

     அந்நாட்டுச் சிறையிலுள்ள 77 மீனவர்களையும், சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள  தமிழக மீனவர்களின் 102 படகுகளையும் விடுவிக்கக் கோரியும், இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலை நிறுத்துவதற்கு நிரந்தர நடவடிக்கை எடுக்கக் கோரியும், இரு நாட்டு மீனவர்களும் இந்திய-இலங்கை கடல் பகுதியில் சுமூகமான முறையில் மீன்பிடிப்பதற்கு  இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகளின் அடுத்தக் கட்டப் பேச்சுவார்த்தையை தொடங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மீது மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி, ராமேசுவரம் மீனவர்கள் காலைவரையற்ற வேலைநிறுத்தத்தை வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளனர்.

    மீனவர்களின் கோரிக்கைகள் மீது மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க தாமதம் செய்யும்பட்சத்தில், தங்கச்சிமடம் பகுதியில் ஜூலை 28 ஆம் தேதி தொடர் உண்ணாவிரதப் போராட்டமும் நடத்த மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    மீனவர்களின் இந்த காலவரையற்ற வேலை நிறுத்தத்தால், மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் மற்றும் மீன்பிடித் தொழிலை சார்ந்துள்ளவர்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai