சுடச்சுட

  

  ராமேசுவரம் திருக்கோயில் ஆடித் திருவிழா: ஜூலை 27 இல் கொடியேற்றத்துடன் தொடக்கம்

  By ராமேசுவரம்  |   Published on : 23rd July 2016 01:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் 17 நாள்கள் நடைபெறும் ஆடித் திருவிழா, ஜூலை 27 இல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

     இது குறித்து, செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை திருக்கோயில் இணை ஆணையர் செல்வராஜ் தெரிவித்ததாவது:   ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித் திருவிழா, இந்தாண்டு ஜூலை 27 ஆம் தேதி காலை பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி முன்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இத்திருவிழாவின் முக்கிய நிகழச்சியான ஆகஸ்ட் 2 ஆம் தேதி அமாவாசையை முன்னிட்டு, சுவாமி, அம்மன் எழுந்தருளி அக்னிதீர்த்தக் கடலில் பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கும் நிகழ்ச்சியும், ஆகஸ்ட் 4 ஆம் தேதி சுவாமி, அம்மன் தேரோட்டம் நிகழ்ச்சியும், ஆகஸ்ட் 6 இல் அம்மன் தபசு மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழச்சியும், ஆகஸ்ட் 7 ஆம் தேதி இரவு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மனுக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன.

    இதை முன்னிட்டு, 17 நாள்களும் சுவாமி, அம்மன் தினசரி ஒவ்வொரு அலங்காரத்தில் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி திருக்கோயிலை சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    மேலும், திருக்கல்யாண மண்டபத்தில் தினசரி இரவு ஆன்மிக இன்னிசை நிகழ்ச்சிகளும், ஆன்மிக பட்டிமன்றங்களும் நடைபெறும் என அவர் தெரிவித்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai