சுடச்சுட

    

    அப்துல்கலாம் சிலை நிறுவ உலமா சபை திடீர் எதிர்ப்பு

    By ராமநாதபுரம்,  |   Published on : 24th July 2016 12:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அப்துல்கலாமின் நினைவிடத்தில் அவருக்கு சிலை நிறுவ உலமா சபை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    ராமநாதபுரத்தில் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் உயர்மட்டக் குழு கூட்டம் அதன் தலைவர் ஏ.வலியுல்லா ஹழரத் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமுக்கு சிலை வைப்பது இஸ்லாமிய மார்க்கத்துக்கு விரோதமானது. இதுவரை இஸ்லாமியத் தலைவர்கள் யாருக்கும் சிலை வைக்கப்படவில்லை. சிலை வைப்பது இஸ்லாமிய மக்களின் மதஉணர்வுகளைப் புண்படுத்துவதாகும். எனவே மத்திய, மாநில அரசுகள் அப்துல்கலாமுக்கு மணிமண்டபம், நூலகம், ஆராய்ச்சிக்கூடம் அமைப்பது போன்றவற்றை மட்டும் செயல்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சபையின் பொதுச் செயலாளர் எம்.அப்துல்ரஹ்மான் வரவேற்றார். உலமா சபையின் பொருளாளர் முஹம்மது யாசின் நன்றி கூறினார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உலமாக்கள் பலரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai